அதிமுக வேட்பாளர் காளியப்பன் உரிய விளக்கம் : வேட்பு மனு ஏற்பு

அதிமுக வேட்பாளர் காளியப்பன் உரிய விளக்கம் அளித்ததை அடுத்து அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர் காளியப்பன் உரிய விளக்கம் : வேட்பு மனு ஏற்பு
x
நாமக்கல் மக்களவை தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் பொதுத் துறை எண்ணெய்  நிறுவனங்களில் தொழில் முறை ஒப்பந்தம் செய்துள்ளதாக, அவருடைய வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து   அந்த மனு மீதான பரிசீலனையை  நிறுத்திய தேர்தல் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். அதிமுக வேட்பாளர் காளியப்பன் உரிய விளக்கம் அளித்ததை அடுத்து அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்