பழனியில் ரோப்கார் சேவை ஒருநாள் நிறுத்தி வைப்பு...

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
பழனியில் ரோப்கார் சேவை ஒருநாள் நிறுத்தி வைப்பு...
x
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. ரோப்கார்களுக்கு மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். பணியின் போது ரோப்காரில் கீழ்தளம், மேல் தளங்களில் உள்ள பெரிய இரும்பு சக்கரங்கள், இரும்புகம்பி போன்றவை மாற்றப்படுகிறது. மேலும் மின்மோட்டர்களும், பெட்டிகளும் புதியதாக பொருத்தப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் சேவை மீண்டும் துவங்கும் வரை, வின்ச் மற்றும் படிபாதைகள் வழியாக மலை மீது சென்று வர கோயில் இணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்