பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது
x
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 49 புள்ளி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 புள்ளி 900 கிலோ தங்கத்தை  பறிமுதல் செய்தனர். தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் மாற்றி, ஆசன வாயிலில்  மறைத்து அவர்கள் எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து, ராமநாதபுரத்தை சேர்ந்த, பைசல், அலிகான், காஜா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Next Story

மேலும் செய்திகள்