"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்
வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் இவ்வாறு தெரிவித்தார். மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத செயல்களை செய்து வருவதாகவும், பணக்காரர்களை பாதுகாக்கக் கூடிய அரசாக உள்ளது எனவும் அவர் கூறினார். வரும் தேர்தலில் மோடியின் குற்றத்தை மட்டும் கூறி மக்களிடம் ஓட்டுக்கேட்காமல், நல்ல திட்டங்களை வைத்தும் ஓட்டு கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story