கோயில்களில் கொள்ளையடித்த 3 இளைஞர்கள் : இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ஒசூர் அருகே கம்பள்ளி, காளிநாயக்கனப்பள்ளி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள கோயில்களில் 3 இளைஞர்கள் திருடியுள்ளனர்.
கோயில்களில் கொள்ளையடித்த 3 இளைஞர்கள் : இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x
ஒசூர் அருகே கம்பள்ளி, காளிநாயக்கனப்பள்ளி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள கோயில்களில் 3 இளைஞர்கள் திருடியுள்ளனர். இதேபோல் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் திருட முயற்சித்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். 3 பேரையும் சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த 3 இளைஞர்களையும் கைது செய்துத போலீசார், அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் தேன்கனிகோட்டை பட்டாளம்மன் தெருவை சேர்ந்த மாதேஷ், முத்துராஜ் மற்றும் காளியப்பன் என்பது தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்