வாடிக்கையாளர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் உணவு அருந்த வந்த வாடிக்கையாளர்களை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வாடிக்கையாளர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் உணவு அருந்த வந்த வாடிக்கையாளர்களை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அழகியமண்டபத்தில்  இயங்கி வரும் ஒரு தனியார் ஹோட்டலுக்கு நேற்று நள்ளிரவில் இரண்டு இளைஞர்கள்  உணவு அருந்துவதற்காக  சென்றுள்ளனர். அப்போது ஊழியர்களுக்கும், அந்த இரண்டு இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் ஹோட்டலுக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இளைஞர்களை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்