ஆளுநருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தமிழக ஆளுநருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
x
தமிழக ஆளுநருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி வந்த அந்தக் கடிதத்தில் சரவணா பிரசாத் என பெயரிட்டு எழுதப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகை தகர்க்கப்படும் என இருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் உயிருக்கு மிரட்டல் விடுத்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கடிதம் எழுதிய சரவணா பிரசாத் யார், கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்