த.மா.கா.வுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கு : தேர்தல் ஆணைய நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுப்பு

த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார்.
த.மா.கா.வுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கு : தேர்தல் ஆணைய  நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுப்பு
x
த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், த.மா.கா.வின் கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன், மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த நிபந்தனைகளை எதிர்த்தும், சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரியும்  ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தேர்தல் ஆணைய நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.  மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்