போலி நகை விற்ற வடமாநில குடும்பம் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போலி நகைகளை கொடுத்து தங்க நகைகளை வாங்கிய வடமாநில குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி நகை விற்ற வடமாநில குடும்பம் கைது
x
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து தங்கியிருந்த வடமாநில குடும்பத்தினர் 5 பேர், புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் நகை கடையில் ஜிமிக்கி கம்மலை கொடுத்து, 8 கிராமில் தங்க செயின் வாங்கி உள்ளனர்.இதனையடுத்து அவர்கள் சென்றபின் நகைக்கடை உரிமையாளர் ஜிமிக்கி கம்மலை சோதனை செய்தபோது, அது போலி என்று தெரிய வந்துள்ளது.இதனையடுத்து இது குறித்து கடை உரிமையாளர்  நவரத்தினா சிங் அளித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.இந்நிலையில் தண்டையார்பேட்டை அருகே அந்த குடும்பம் கைது செய்யப்பட்டது. விசாரணையில் 20 போலி கவரிங் கம்மல்கள் அவர்களிடம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கம்மல்களையும், தங்க செயினையும் பறிமுதல் செய்த போலீசார் 2 வயது குழந்தை உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்