வெளிநாட்டு பயணிகள் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை : ஆவணங்கள் காட்டியும் தர மறுக்கும் கருவூல அதிகாரிகள்

மலேசிய சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான மலேசியன் வெள்ளி கரன்சிகளை பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது
வெளிநாட்டு பயணிகள் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை : ஆவணங்கள் காட்டியும் தர மறுக்கும் கருவூல அதிகாரிகள்
x
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை தந்த, மலேசிய சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான மலேசியன் வெள்ளி கரன்சிகளை பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது.பயணிகள் தங்களின் குடியுரிமை ஆவணம்,  பணத்திற்கான ஆதாரங்களை காட்டியும்  பணத்தைத் தராத பறக்கும் படையினர்,  மாவட்ட கருவூலத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.இதற்கிடையே மாவட்ட கருவூல  அதிகாரிகளும் சரியான பதில் அளிக்காமல் அலை  கழிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சுற்றுலா பயணிகள்,  உணவு உண்ணக்கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும்,எனவே அதிகாரிகள் உடனடியாக பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்