மறைந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல் தகனம்
பனிப் புயலில் சிக்கி காஷ்மீர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல், சொந்த ஊரான டி. அரசப்பட்டியில் 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
பனிப் புயலில் சிக்கி காஷ்மீர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல், சொந்த ஊரான மதுரை மாவட்டம் டி. அரசப்பட்டியில் 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பணியில் இருந்த போது பனிபுயலில் சிக்கி காயமடைந்துள்ளார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, உறவினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. மறைந்த பால்பாண்டியின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story