10 ஆம் வகுப்பு கணித தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - உதயகுமார், கணித ஆசிரியர்
x
திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு கணித தேர்வு மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. 

கணித தேர்வில், கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், மற்றும் நீட் தேர்வுகளுக்கு, கேட்ட கேள்விகள் போல இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணித தேர்வினால் ஏற்பட்ட அதிக மன உளைச்சல் காரணமாக, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தேர்வை முடித்த கையோடு தற்கொலை செய்து கொண்டார்.  மாணவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, கருணை மதிப்பெண் வழங்கிட வேண்டும் என, கணித ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்