நாளிதழ் எரிப்பு வழக்கு : ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி ராஜாராமு-க்கு 5 ஆண்டு தண்டனை

ஓய்வு பெற்ற ஏ. டி.எஸ். பி ராஜாராமு-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
நாளிதழ் எரிப்பு வழக்கு : ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி ராஜாராமு-க்கு 5 ஆண்டு தண்டனை
x
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 17வது எதிரியாக அப்போதைய ஊமச்சிக்குளம் டிஎஸ்பி-யாக இருந்த வி. ராஜாராம்  சேர்க்கப்பட்டிருந்தார்.சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மேல்முறையீடு வழக்கில் ராஜாராமை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.ஏ.டி.எஸ்.பி.யாக அவர் ஓய்வு பெற்ற நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜாராம் ஆஜரானார்.இதையடுத்து, அவருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்