அனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்

அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்
x
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் கன்னம்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கட்சிக் கொடிகள் கட்டுவதற்காக, பொது இடங்கள் சேதப்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.கட்சிகள் சண்டையிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை எழுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் அமர்வு முன்பு விசார​ணைக்கு வந்தது.அப்போது, அனுமதியில்லா கொடி கம்பங்களை அகற்றி 21 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்து ஏப்ரல் 1ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்