சுற்றுச்சூழல் அழகை கெடுக்கும் விளம்பரங்கள் : விளம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

சுற்றுச்சூழல் அழகை கெடுக்கும் வகையிலான அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
x
சுற்றுச்சூழல் அழகை கொடுக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தை சேர்ந்த யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆஜரான தமிழக அரசு தரப்பு  வழக்கறிஞர், 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக குழு அமைத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நோட்டீஸ் வழங்கப்படுகிறதே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, மலைகள், வனப்பகுதியில் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான விளம்பரங்களுக்கு தடை விதித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்