குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ : ஹெலிகாப்டரில் தீயை அணைக்கும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீயை, தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அணைத்து வருகின்றனர்.
x
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீயை, தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அணைத்து வருகின்றனர். வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக சிறிய அளவில் எரிந்த வந்த தீயானது, பெரிதாகி சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் காட்டுத்தீ போல பரவியுள்ளது. இதனையடுத்து, ஆட்சியர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், வீரர்கள் தீயை நெருங்க முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் ரசாயனம் கலந்த தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்