"மதுரையை மீட்பதே பிரசாரத்தின் முக்கிய யுக்தி" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன்

சு.வெங்கடேசனுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்வு
மதுரையை மீட்பதே பிரசாரத்தின் முக்கிய யுக்தி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன்
x
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்வு நடந்தது. ஆரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வெங்கடேசனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேசிய வேட்பாளர் வெங்கடேசன், கல்வி, தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் அரசியல் அநாதையாகி விட்ட மதுரையை மீட்டெடுப்பதே பிரசாரத்தின் முக்கிய யுக்தியாகும் எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்