இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்
x
சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று முதல் 3 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். அவரது 3 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தை அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்