திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
x
காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின்  கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டினர். மீன் வளத்துறை அமைச்சர், மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினாரா எனக் கேள்வி எழுப்பிய அவர், வாக்கி டாக்கி திட்டம், ஊழல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டது என்றார். திமுக ஆட்சியின்போது மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்