மணப்பாறை : இரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை : இரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறையில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பூட்டப்பட்டிருந்த‌து. இந்நிலையில் வங்கியில் இருந்து அபாய ஒலி எழுந்த‌தை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையிடமும், வங்கி ஊழியர்களிடமும் தகவல் தெரிவித்தனர். பதற்றத்துடன் அங்கு வந்த வங்கி நிர்வாகிகள், திறந்து பார்த்தபோது, வங்கியில் யாரும் நுழையவில்லை என்பது உறுதியானது. அபாய ஒலி எழுப்பும் வயர் மீது எலி ஏறி இருக்கலாம் என வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்