திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்
x
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. இன்று மகா தேரோட்டத்தை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து, திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். இதனையடுத்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் புறப்பட்டது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.   

தீமிதி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்


 
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த திருவிழாவில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உருத்திர வன்னிய மகாராஜா கோயில் கும்பாபிஷேகம்



சேலம் ஜலகண்டபுரம் உருத்திர வன்னிய மகாராஜா திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மலையம்பாளையத்தில் உள்ள குளத்தில் இருந்து செண்டை மேளம் முழங்க ஐந்தாயிரத்து எட்டு தீர்த்தக் குடங்ககளுடன் ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைப்பெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




Next Story

மேலும் செய்திகள்