திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை
x
திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றிற்குள் ஒரு நபர் நுழையும் அளவு ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லா பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிய வந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்