மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்

தனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்
x
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூட்டை சேர்ந்த கிறிஸ்டோபர், அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி செலின் ஜோசப், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். கிறிஸ்டோப்ர் தினமும் குடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தவறை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணி முடிந்து வீடு திரும்பிய கிறிஸ்டோபர் மனைவி செலினை உருட்டு கட்டையால்  தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்ததுடன் வலது கண்ணிலும் அடிவிழுந்துள்ளது. இதில் செலினின் வலது கண்பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. கண்ணில் ரத்தம் வடிய களியக்காவிளை காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார் ஆசிரியை செலின்.ஆனால் அங்கிருந்த போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்ததோடு,  மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் இங்கு நிற்காதீர்கள் என காவலர்கள் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற செலினுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். திருமணம் ஆன நாள்முதல் இது போன்று பலமுறை தன்னை தாக்கியுள்ளதாகவும், தனது நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த செலின், தனது கணவரும், அவரது சகோதரரும் காவல்துறையில் பணியாற்றி வருவதால், புகாரை வாங்க போலீசார் மறுப்பதாக தெரிவித்துள்ளார். தங்களை தொடர்ந்து மிரட்டிவரும் இருவர் மீதும், மாவட்ட மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்கவேண்டும் என செலீன் கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்