தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது

சென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது
x
சென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார். பின்னர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள் என  24 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மதுரையில் பூத் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார், அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி கல்லூரி உள்ளட்ட 10 இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 13 ஆயிரத்து 722 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட 252 வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள ஆயிரத்து 350 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா பயிற்சியை தொடங்கி வைத்தார். சேலத்தில் 11 இடங்களில் வாக்குச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்