ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்
ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு
x
சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில்  சந்தித்து பேசினார்கள். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு தாங்கள்  ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலம்பு சுரேஷ், மத்தியில் உள்ள பாஜக அரசை வீழ்த்தி, ராகுலை பிரதமராக்க பாடுபடப் போவதாக தெரிவித்தார். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்