சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் யார்?

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி மட்டும், வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது
சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் யார்?
x
சிவகங்கை தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அமமுகவும் தேர்போகி பாண்டி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.இந்நிலையில், சிவகங்கை தொகுதியில், நாடாளுமன்ற வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில்,கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தேவகோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி ஆகியோரது பெயர்களையும் கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இதனிடையே,வழக்குகள் இருப்பதால் கார்த்திக்குக்கு சிவகங்கையில் இடம் கொடுக்க முடியாது என காங்கிரஸ் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், திமுக வசம் உள்ள தென்காசி தொகுதியை காங்கிரஸ் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்