ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்
ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
x
ஒவ்வொரு தேர்தலின்போதும் ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் கடந்த 2004ஆம் ஆண்டு வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 55 லட்சத்து 38 ஆயிரத்து 123 என கணக்கு காண்பித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.ராகுல்காந்தி கடந்த 2009ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது 2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து மதிப்பு என காண்பித்துள்ளதாகவும், 2014ஆம் ஆண்டு பொது தேர்தலின்போது 9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு என கணக்கு காண்பித்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.2004ஆம் ஆண்டில் 55 லட்சம் ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2014 ஆம் ஆண்டில் 9 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்