தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...

பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர்.
x
சென்னையை அடுத்த ந‌ந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினத்தந்தி குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாட்கள் கல்வி கண்காட்சி தொடங்கியது. இதில் மருத்துவம் , பொறியியல் உள்பட பல்வேறு பிரிவுகளின் நிபுணர்கள் பங்கேற்று, மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து முடிவெடுக்க உதவுகின்றனர். இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடக்கிறது. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மேல்படிப்பை தேர்வு செய்யும் நோக்கில், சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் என பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்