மீனாட்சியம்மன் வேடத்தில் திருநங்கை வேட்பு மனுத்தாக்கல்...

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரும், நான்காவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
x
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரும், நான்காவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நான்காம் நாளான இன்று, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாண்டியம்மாள் ஆகியோர் மதுரை தொகுதி தேர்தல் அலுவலர் நடராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல், மதுரையை சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சியம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதுவரை சி.பி.எம், நாம் தமிழர் கட்சி, திருநங்கை உள்ளிட்ட 7 வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்