ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
சென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தண்ணீர் தொட்டியில் வண்ண பொடிகளை வீசி, ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் தெளித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 13 சிறுவன் ஒருவனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதனைதொடர்ந்து மேலும் 3 சிறுவர்களும் மின்சாரம் தாக்கியது போல் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் மயங்கி விழுந்ததால் அனைவரையும் மருத்துமனை கொண்டு சென்றனர். அடுத்தடுத்து 4 சிறுவர்கள் தண்ணீரில் மயங்கி விழுந்ததால் மின்சாரம் தாக்கி மயங்கி உள்ளனரா, அல்லது வேற எதும் காரணமாக என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்