தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...
x
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டதுடன்,  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். முருகன் சிறப்பு அலங்காரத்துடன், மயில் வாகன வீதியுலா இரவு நடைபெற உள்ளது.

தீர்த்தவாரி வைபவம் : 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. கும்பகோணத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாகேஸ்வரர் கோவில், ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் சுவாமிகள் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மகாமகக் குளத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை : 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவிற்கு  திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் தலைமை தாங்கினார். முன்னதாக கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. 11 நாட்கள் நாள்தோறும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெற்று, அதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்