தொழில் அதிபரிடம் நூதன கொள்ளை - நிர்வாணபடுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டியது அம்பலம்

தொழில் அதிபரை நிர்வாணபடுத்தி புகைப்படம் எடுத்து 3 லட்சம் ரூபாய் பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 10 பேரை வாணியம்பாடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழில் அதிபரிடம் நூதன கொள்ளை - நிர்வாணபடுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டியது அம்பலம்
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர், நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் ரப் ஆரிஃப்  என்பவர், தோல் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தயாரை பார்த்துக்கொள்ள ஆட்கள் தேவை என அவர் விளம்பரம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அவரை செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அப்துல் ரப் ஆரிஃப், ஆம்பூரில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை வீட்டுக்குள் அழைத்து சென்ற பெண், தனியறையில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டுக்குள் வந்த முகமூடி அணிந்த 10 பேர் அப்துல் ரப் ஆரிஃபை நிர்வாணப்படுத்தி, புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டுகளை பறித்துச்சென்று, அதன்  மூலம் 2 லட்சம் ரூபாய்க்கு நகைகளை வாங்கிய அந்த மர்ம கும்பல் 1 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளனர். 

இந்த நிலையில் அப்துல் ரப் ஆரிஃபை வேறொரு இடத்திற்கு ஆட்டோவில் வைத்து அழைத்து செல்ல அந்த கொள்ளை கும்பல் முயன்றுள்ளது. அப்போது அப்துல் ரப் ஆரிஃப்  சத்தம் போட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து அவரை மீட்டுள்ளனர். மேலும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோட முயன்றவரையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்