"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.
x
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று  பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார். பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜன், சென்னை மாநிலக் கல்லூரி பொருளாதாரத் துறையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சி, உலக அளவில் நல்ல நிலைதான் என்றாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று குறிப்பிட்டார். விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், இந்த இரண்டு பிரச்சினைகளும் தீர்ந்தால்தான் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதாக குறிப்பிடலாம் என்றும் கூறினார்.  விவசாயிகளுக்கு பணம் வழங்குவது, தற்காலிக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவுமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது என்றும் ரங்கராஜன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்