டூப் போட்டு முழு படத்தையும் எடுத்த இயக்குனர் - நடிகர் பாபிசிம்ஹா போலீசில் புகார்

நடிகர் பாபி சிம்ஹா, பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
டூப் போட்டு முழு படத்தையும் எடுத்த இயக்குனர் - நடிகர் பாபிசிம்ஹா போலீசில் புகார்
x
நடிகர் பாபி சிம்ஹா, பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜான்பால்ராஜ் என்பவர் இயக்கி தயாரித்த அக்னிதேவ் என்ற படத்தில் 5 நாட்கள் மட்டுமே தான் நடித்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சினையால் அதில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பதில் டூப் போட்டு படத்தை எடுத்து, படத்தின் பெயரையும் அக்னிதேவி என மாற்றி ஜான்பால்ராஜ் வரும் 22ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஜான்பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்