தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து - 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பின

கோவை மேட்டுப்பாளையம் அருகே தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து - 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பின
x
கோவை மேட்டுப்பாளையம் அருகே தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள பள்ளத்தில் செடி கொடிகள் காய்ந்து சருகாகி கிடந்தன.கோடை வெயிலின் தாக்கத்தால், செடி கொடிகளில் திடீரென்று தீ பற்றி எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென தென்னை மரங்களுக்கு பரவியது.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டதால் 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் இருந்து தப்பின.இருந்த போதிலும், 50 க்கும் மேற்பட்ட நிலவேம்பு மற்றும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. 

Next Story

மேலும் செய்திகள்