"நிர்மலா தேவியை நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவியை நாளை பிற்பகல் நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவியை நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் உள்ள நிர்மலா தேவியை சந்திக்க முடியவில்லை என்றும் இதனால் அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறினார். 

அப்போது பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும் நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அரசு ஒத்துழைக்கும் என கூறினார். இதனையடுத்து சிறையில் உள்ள நிர்மலாதேவியிடம் விளக்கங்கள் பெற வேண்டும் என்பதால் அவரை நாளை மதியம் 2.15 மணிக்கு  நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த விசாரணை நீதிபதிகளின் தனி அறையில் நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கினை நாளை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்