மாற்றுத்திறனாளி மகனை குழந்தை போல பராமரித்து வரும் தாய் : அரசு உதவி செய்ய கோரிக்கை

நெல்லையில், 37 வயது மாற்றுத் திறனாளி மகனின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி மகனை குழந்தை போல பராமரித்து வரும் தாய் : அரசு உதவி செய்ய கோரிக்கை
x
நெல்லை பாளையங்கோட்டை அடுத்த பொட்டல் கிராமத்தை சேர்ந்த ருக்மணி என்பவர் 37 வயதுடைய மாற்றுத்திறனாளி மகனை குழந்தை போல பராமரித்து வருகிறார்.  ருக்மணியின் கணவர் உயிரிழந்த பின்னர் அவருக்கு கிடைக்கும்  500 ரூபாய் ஓய்வூதியம் மற்றும் அவரது மாற்றுதிறனாளி மகனுக்கு கிடைக்கும் 1500 ரூபாய் தொகையை வைத்து இருவரும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, மாற்று திறனாளி உதவி தொகைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் உதவி தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உதவி தொகை நிறுத்தப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ள ருக்மணி, தொடர்ந்து உதவி தொகை கிடைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்