கூட்டுறவு வங்கியில் ரூ 3.34 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

திருவாரூரில் மத்திய கூட்டுறவு வங்கியில் 3 கோடியே 34 லட்சம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
கூட்டுறவு வங்கியில் ரூ 3.34 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
x
மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கிளை வங்கியில் கடந்த 2013ஆம் ஆண்டில் கணினி வழி பண பரிமாற்றத்தில் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக  புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் 18 பேர் மீது வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கணினி ஆபரேட்டர் அருள் முருகன்,  கணினி வாயிலாக தங்களது உறவினர்கள் வங்கிக்கணக்கில் 3 கோடியே 34 லட்சம் வரவு வைத்து பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, வங்கி துணை பதிவாளர் மாரீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வங்கி மேலாளர் சசிகுமார், கணினி ஆபரேட்டர் அருள் முருகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வங்கி ஊழியர்கள் சிவக்குமார், ராஜேஷ் கண்ணா, பாலதண்டாயுதம் உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்