திருவாரூர் கோயிலில் 3-வது நாளாக தொடர்ந்து ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் போலி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 3 வது நாளாக இன்றும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
திருவாரூர் கோயிலில் 3-வது நாளாக தொடர்ந்து ஆய்வு
x
* திருவாரூர்  தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில்,  பல மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 359 சிலைகள் உள்ளன. அவற்றை பொன்மாணிக்க வேலு தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரினர் ஆய்வு மேற்கொண்ட போது 5 போலி சிலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

* இதையடுத்து பாதுகாப்பு மையத்தில் உள்ள மற்ற சிலைகளை மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் 
தலைமையிலான குழு மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 3வது நாளாக இன்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.  

* நாகை  மாவட்டம் தேவூர் ,வெண்மனி.பகுதிகளில் உள்ள கோயிலுக்கு சொந்தமான சிலைகள் ஆய்வு செய்யப்படு வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வில் 2ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆய்வு பணிகள் தொடரும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்