பராமரிக்கப்படாத அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?
பதிவு : மார்ச் 09, 2019, 11:27 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்ட பிறகும் கூட, அவல நிலை இன்றும் தொடர்கிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. 15 ஏக்கர் பரப்பளவில், 9 தளங்களுடன்  சகல வசதிகளுடன் அடங்கிய இந்நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என பல பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டும் என​வும் உத்தரவிட்டது. 

ஆனால் தற்போது வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அவலங்கள் தீரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த ஒரு தளத்திலும் கழிவறைகளில் தண்ணீர் கிடையாது உள்ளே நுழைந்தாலே துர்நாற்றம் வீசக் கூடிய அளவிற்கு கழிப்பறைகள் நிலை இருக்கின்றன. போட்டித் தேர்வுக்கு படிக்க வரும் இளைஞர்கள் நூலகத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததை கண்டு வேதனை தெரிவிக்கின்றனர். நூலகத்தின் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட 1000 பேர் அமரக்கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கம்,  நூலகம் திறந்தது முதல் 8 ஆண்டுகளாக  பயன்பாட்டிற்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

435 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4196 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4305 views

பிற செய்திகள்

ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னோரு செருப்பும் வரும் - கமல்

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா வேளச்சேரியில் நடைபெற்றது.

706 views

கல்வெட்டில் எம்பி என பெயர் - ரவீந்திரநாத் விளக்கம்

அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.

67 views

எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற முடியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

30 views

"மறுவாக்குப்பதிவிற்கு காரணம் திமுக தான்" - அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் புகாரின் அடிப்படையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

55 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

31 views

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.