"பிரேமலதா பேச்சை மக்கள் விரும்பமாட்டார்கள்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ள கருத்துக்கள், அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
பிரேமலதா பேச்சை மக்கள் விரும்பமாட்டார்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
x
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ள கருத்துக்கள், அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மாறுபாடுகள் இருந்தாலும், தலைவர்கள் அரசியல் நாகரீகத்துடன் கருத்துக்கள் தெரிவிப்பதையே தமிழக மக்கள் விரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஊடகத்துறை நண்பர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்