விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் : ஜெயில் வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு

புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்
விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் : ஜெயில் வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு
x
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்த  ஜெயமூர்த்தி,இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் ஜெயமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லை என ,புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஜெயமூர்த்தியை போலீசார், அடித்துக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதையடுத்து பாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.தற்போது இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், ஜெயில் வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்