உலக நாடுகளின் கொடிகள் அடையாளம் கண்டு அசத்தும் 2 வயது சிறுவன்

கோவையில், 2வயது சிறுவன் உலக நாடுகளின் பெயரை சொன்னால், அந்நாட்டின் கொடிகளை அடையாளம்காட்டி ஆச்சர்யப்படுத்துகிறான்.
x
கோவையை சேர்ந்த டேவிட்-நந்தினி தம்பதியின் 2 வயது மகன் ஆர்த்திக் மித்திரன். துறு துறுவென ஓடி ஆடி விளையாடும் இந்த சுட்டி குழந்தை, உலக நாடுகளின் பெயரை சொன்னால், நொடி பொழுதில் அந்நாட்டின் கொடிகளை அடையாளம் காட்டுகிறான். அத்துடன் மலர்கள், தலைவர்கள், விலங்குகள் பெயர்களையும் மழலை மொழியும் சொல்லி அசத்துகிறான். அவனது நினைவாற்றலை கண்டு வியப்படையும் பெற்றோர்,  எந்தவொரு திணிப்புமின்றி, ஆர்த்திக் மித்திரனின் ஆர்வத்தை அறிந்து செயல்படுவோம் என மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்