சிக்கியது பட்டுப்புடவைகள் திருடும் ஆந்திர கும்பல் : 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது- போலீஸ் விசாரணை

சென்னை மாநகரில், பல துணிக்கடைகளில் பட்டுப்புடவை திருடிச் சென்ற 4 பேர் கொண்ட ஆந்திர கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிக்கியது பட்டுப்புடவைகள் திருடும் ஆந்திர கும்பல் : 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது- போலீஸ் விசாரணை
x
பாடி பாலம் அருகே திருமங்கலம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில், 3 பெண்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் அமர்ந்திருந்ததால், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கும்பல் துணிக்கடைகளுக்கு சென்று பல லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார், கனகதுர்கா, நாகமணி, மேனா, பாலு மாகேந்திரா ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியை திருமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்