நிலம் வரன்முறைப்படுத்த லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்

கோவை அருகே நிலத்தை வரன்முறைப்படுத்த இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலம் வரன்முறைப்படுத்த லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
x
கோவை அருகே நிலத்தை வரன்முறைப்படுத்த இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்குள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் அலுவலக செயலாளராக இருக்கும் பிரகாஷ் என்பவர், வடமதுரையை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் நிலத்தை வரன்முறைப்படுத்த இரண்டு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரகாஷின் உதவியாளர்களான தனலட்சுமி மற்றும் இந்திராணி ஆகியோரிடம் வினோத் கொடுத்துள்ளார். அப்போது மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவர்களிடமிருந்து கணக்கில் வராத 64 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்