மளிகை கடைக்காரர் வீட்டில் குட்கா பதுக்கல் - உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் அதிரடி

ஈரோட்டில் மளிகை கடைக்காரர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
மளிகை கடைக்காரர் வீட்டில் குட்கா பதுக்கல் - உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் அதிரடி
x
ஈரோட்டில் மளிகை கடைக்காரர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம்  பெருந்துறை பழைய பேருந்து நிலையத்தில் மளிகை கடை நடத்தி வரும் தேவதாசன் என்பவர், தனது வீட்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை  அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 102 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்