சத்தியமங்கலம் : மான் வேட்டை - ஒருவர் கைது

சத்தியமங்கலம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த வெள்ளையன் என்பவரிடம் வனத்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம் : மான் வேட்டை - ஒருவர் கைது
x
சத்தியமங்கலம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட  வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த வெள்ளையன் என்பவரிடம் வனத்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சில நாட்களுக்கு முன்பு வேட்டையாடிய மான் தோலை பாறையில் மறைத்து வைத்துள்ளதாகவும், அதனை எடுக்கவே தற்போது வனப்பகுதிக்குள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வெள்ளையன், கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்