உணவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவர் : மீதமான உணவை சாப்பிட்ட நாய் உயிரிழப்பு

உணவில் விஷம் வைத்து, மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரங்கேறியுள்ளது.
உணவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவர் : மீதமான உணவை சாப்பிட்ட நாய் உயிரிழப்பு
x
உணவில் விஷம் வைத்து, மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளியோடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களான பெல்லார்மினுக்கும், வியன்னூரை சேர்ந்த திவ்யாவுக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை திவ்யாவுக்கு உப்புமா மற்றும் குளிர்பானத்தை பெல்லார்மின் பாசமாக கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட திவ்யா, மீதமுள்ளதை தனது வீட்டு நாய்க்கும் வைத்துள்ளார். இதற்கிடையே, உணவருந்திய சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு ரத்த வாந்தி வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை திவ்யா உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வராததையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து திவ்யாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இறந்து கிடந்த நாய் மற்றும் சிதறி கிடந்த உணவுப்பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யா கொடுத்த இறுதி வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே அவரது கணவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்