பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்

சீர்காழியில் பள்ளி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்
x
சீர்காழியில் பள்ளி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை மாலைபோல் கட்டி பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று கீழே ஊற்றியும், கட்டுமான பொருட்களை பிடுங்கி எரிந்தும் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்