சிறுமிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு : பள்ளியில் ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்
ஆசிரியர் கைது செய்ய பெற்றோர்கள் கோரிக்கை
குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் 50 வயதான ஆசிரியர் சோமசுந்தரம், 5 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதனை அறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர் சோமசுந்தரத்துடன் வாக்குவாதம் செய்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை ஆசிரியர் சோமசுந்தரம் மறுத்தார். இறுதியில் வாக்குவாதம் முற்றி, மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியரை கடுமையாக தாக்கினர். ஆசிரியர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

